News

தனியார் கேம்பஸ் மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

ஹோமாகம-மொரகஹஹேன வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரின் தகவல்படி, உயிரிழந்தவர் நெல்லவ, நிக்கதலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஹோமாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button