News

பாகிஸ்தானில் ஈரானுடன் பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்தது

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பல மணிநேர அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா சமர்ப்பித்த நிபந்தனைகளை ஈரான் ‘ஏற்க விரும்பவில்லை எனவும் ஈரானின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் அதிக பாதகமான செய்தியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தனது “இறுதி மற்றும் சிறந்த” பரிந்துரையை ஈரானிடம் முன்வைத்துள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு மிகப் பெரிய கெட்ட செய்தி…! முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை – வெளியேறிய அமெரிக்கா | Us And Iran Have Not Reached An Agreement Jd Vance

கடந்த 21 மணிநேரத்தில் டொனால்ட் ட்ரம்புடன் சுமார் 10 முறைக்கும் மேலாகத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றதாக ஜே.டி. வேன்ஸ் தெரிவித்தார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்பதற்கான “உறுதியான வாக்குறுதியை” அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் அணு ஆயுதக் கனவை ஈரான் கைவிட வேண்டும் என்பதே ட்ரம்பின் முக்கிய இலக்காகும். “நாங்கள் மிகவும் நெகிழ்வாகவும், அனுசரித்தும் நடந்துகொண்டோம். ஆனால் எங்கள் நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயாராக இல்லை என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு மிகப் பெரிய கெட்ட செய்தி…! முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை – வெளியேறிய அமெரிக்கா | Us And Iran Have Not Reached An Agreement Jd Vance

ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தானுக்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button