News

யுத்த நிறுத்தம், பிராந்திய அமைதி மற்றும் தாக்கங்கள் குறித்து கத்தார் பிரதமரும் ஈரானிய வெளியுறவு அமைச்சரும் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தின் நிலை மற்றும் அதன் பிராந்திய தாக்கங்கள் குறித்து விவாதிக்க கத்தார் பிரதமர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


“அமைதி வழிகள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியின் மூல காரணங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தற்போதைய சமரச முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் பதிலளிக்க வேண்டியதன் அவசியம்” குறித்து இரு அதிகாரிகளும் தெரிவித்தனர்.


உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து நீர்வழிகளும் போக்குவரத்திற்காக திறந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் கத்தார் பிரதமர் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button