News
“எமது கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாவது பெரும் மகிழ்ச்சி.. நமக்கும் தேவையானது ஒரு செல்வந்த நாடே..” – அமைச்சர் சமந்த.

“தனது கட்சிக்குள் கோடீஸ்வரர்கள் உருவானால் அது குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், ஒரு செல்வந்த நாட்டை உருவாக்குவதே தனது பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.”
பதுளைப் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
• நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களை செல்வந்தர்களாக்குவதும் தனது அரசியல் நோக்கோக்கின் முன்னுரிமையாகும்.
• கட்சி உறுப்பினர்களோ அல்லது நாட்டு மக்களோ பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைவது, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் அவர் இங்கு வலியுறுத்தினார்.



