News
“இஸ்ரேல், அமெரிக்காவின் ஒரு சிறந்த கூட்டாளி என டிரம்ப் தெரிவிப்பு”

மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் ஒரு சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இடுகையொன்றை பதிவிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மிகவும் துணிச்சலான, விசுவாசமான மற்றும் புத்திசாலித்தனமான ஒரு நாடு என்று டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால யுத்தங்களில் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தியவர்களைப் போலன்றி, இஸ்ரேல் தீவிரமாகப் போராடுவதாகவும், அவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை நன்கு அறிந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



