News

எங்களால் இப்படித் தொடர முடியாது.. 12 மாலிமா எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் மூலம் அறிவிப்பு.

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் குழுவில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், மூன்று பிரதி அமைச்சர்கள் மற்றும் ஏழு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக உள்வாரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்கள் அல்லர் என்பதும், அவர்கள் கடந்த தேர்தல் காலத்தில் ‘மாலிமா’ (Compass) கூட்டணியுடன் இணைந்த கல்விமான்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தமது தொழில்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய இக்குழுவினர், தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் தாம் எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்கள் குறித்தும் கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின்னர், தமது தனிப்பட்ட பொருளாதார நிலை வெறும் வாழ்வாதார மட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.CN

Recent Articles

Back to top button