News

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 மார்ச் மாதத்திற்கான புதிய தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (NCPI) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் காணப்பட்ட நாட்டின் முதன்மை பணவீக்கம் (Headline Inflation), மார்ச் மாதமாகும்போது 2.4% வரை அதிகரித்துள்ளது.

பிரிவுகளின் அடிப்படையில் பணவீக்க மாறுபாடு

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைப் பிரிவுகளின் புள்ளி-க்கு-புள்ளி (Point-to-Point) பணவீக்க விகிதங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

• போக்குவரத்துத் துறை: பெப்ரவரி மாதத்தில் மறைப் பெறுமானமாக (-1.7%) காணப்பட்ட போக்குவரத்துத் துறையின் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 4.9% வரை கணிசமாக உயர்ந்துள்ளது.

• அடிப்படைப் பணவீக்கம் (Core Inflation): அடிக்கடி வில மாற்றங்களுக்கு உள்ளாகும் உணவு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்து கணக்கிடப்படும் அடிப்படைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.7% ஆகப் பதிவாகியுள்ளது.

விலைச் சுட்டெண் மற்றும் பங்களிப்பு

2026 பெப்ரவரி மாதத்தில் 209.4 ஆக இருந்த தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண், மார்ச் மாதத்தில் 210.9 வரை அதிகரித்துள்ளது.

இந்தத் தரவுகளின்படி, மாதாந்த பணவீக்க மாற்றத்திற்கு:

• உணவுப் பிரிவு: -0.27% பங்களிப்பையும்,

• உணவு அல்லாத பிரிவு: 0.99% பங்களிப்பையும் வழங்கியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recent Articles

Back to top button