News

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும் உலகளாவிய ஹலால் மாநாட்டில் பங்குபற்றிய ஹலால் சான்றுறுதிப் பேரவை

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும் உலகளாவிய ஹலால் மாநாட்டில் பங்குபற்றிய ஹலால் சான்றுறுதிப் பேரவை

தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக தாய்லாந்தின் ஹட் யாவில் கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும் உலகளாவிய ஹலால் மாநாட்டில் இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) பங்குபற்றியது.

இந்த மாநாட்டில் தொழில் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், சுற்றுலா, சுகாதாரம், சான்றிதழ், நிர்வாகம், சட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான், சவூதி அரேபியா, கட்டார், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இடமிருந்து வலமாக தாய்லாந்தின் ஹலால் தரநிலைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் இணை பேராசிரியர் டாக்டர் பாகோர்ன் பிரியகோர்ன், இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆக்கிஃப் ஏ. வஹாப், எகிப்து விவசாய மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள கிசா கால்நடை மருத்துவ பணியகத்தின் தலைவர் டாக்டர் அலா அப்தெலால் எல்னெம்ர், பாகிஸ்தான் ஹலால் அதிகாரசபை ஒழுங்குமுறைப்படுத்தல் பணிப்பாளர் மொஹிப் ஸமான், தாய்லாந்தின் அந்தமான் அனடோலியா தொழில்நுட்பக் கல்லூரியின் முகாமையாளர் பேராசிரியர் சுக்ரீ லாங்புதே….

இந்த குழுநிலை கலந்துரையாடலின் போது, பங்குபற்றிய நாடுகளில்

காணப்படும் ஹலால் தொழில்துறை தொடர்பான கண்ணோட்டம் உள்ளிட்ட

பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.   2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய உலகளாவிய ஹலால் சந்தையில்

நுழைவதற்கான உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான உத்திகள் உள்ளிட்ட, இத்தொழில்துறையில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தாய்லாந்து 2001 ஆம் ஆண்டு முதல் ஹலால் உணவில் எவ்வாறு உலகத்தின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது என்பதை தாய்லாந்தின் ஹலால் தரநிலைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் இணை பேராசிரியர் டாக்டர் பகோர்ன் பிரியகோர்ன் எடுத்துக் கூறினார். CODEX ஹலால் தரநிலைகளுக்கு இணங்கும் வகையில், தாய்லாந்து தனது முதலாவது ஹலால் உணவுத் தயாரிப்பு தரநிலைகளை 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்ததாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.2023 ஆம் ஆண்டில் 7.24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட, 180,000 இற்கும் அதிகமான ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியுடன், தற்போது உலகளாவிய ரீதியிலான ஹலால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 8ஆவது ஏற்றுமதியாளராக தாய்லாந்து விளங்குகின்றது.

தாய்லாந்தின் தேசிய பொருளாதாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஹலால் விளங்குகின்றது என்பதை இது சுட்டிக் காட்டுகின்றது.

இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முக்கிய ஏற்றுமதி நாடாக சவூதி அரேபியா விளங்குகின்றது. 2023ஆம் ஆண்டுக்கான அதன் ஏற்றுமதி 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சவூதி அரேபியாவின் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளில் ஹலாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சவூதி ஹலால சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மைகளுக்கான நிறைவேற்று பி 2/3 டாக்டர் தாமர் ஏ. பாசீம், இது சவூதிக்கான சர்வதேச ஏற்றுமதிகளை நேரடியாக செல்வாக்குச் செலுத்துவதாக குறிப்பிட்டார். சவூதி ஹலால் மையம் தற்போது உலகெங்கிலும் உள்ள ஹலால் இணக்கத்தை கொண்ட 76 அமைப்புகளுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், ஹலால் நடைமுறைகளை பின்பற்றுவோருக்கு ஆதரவாக அவர்களது திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில், குளோபல் ஹலால் அகடமியையும் சவூதி ஆரம்பித்துள்ளது. 

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையின பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆக்கிஃப் ஏ. வஹாப் இங்கு குறிப்பிட்டார். இந்த இரண்டு நாடுகளும் தேரவாத பெளத்த பெரும்பான்மை நாடுகளாக உள்ளதோடு, சிறுபான்மையினராக முஸ்லிம்கள் தாய்லாந்தில் 6% ஆகவும் இலங்கையில் 10% ஆகவும் வாழ்கின்றனர். 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களின் ஏற்றுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 14% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



தாய்லாந்தில் ஹலால் தொழில்துறைக்கு ஆதரவளித்து, அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் தாய்லாந்து அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் ஆக்கிஃப் பாராட்டுகளைத் தெரிவித்தார். தாய்லாந்தில் நிரூபிக்கப்பட்டுள்ள வெற்றியைப் போன்று, ஹலால் தொழிற்துறையில் மேலும் நிலைபேறான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு அவசியமென அவர் இங்கு வலியுறுத்தினார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button