News

கிண்ணியாவில் பிறந்து பல ஆண்டுகளாக பிறப்புச் சான்றிதழே இன்று வாழ்ந்து வந்த 35 பேருக்கு, இன்று பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஹஸ்பர் ஏ.எச்_

பல ஆண்டுகளாக பிறப்புச் சான்றிதழ் இன்றி இருந்த 35 பேருக்கு, இன்று (27.04.2026) கிண்ணியா பிரதேச செயலகத்தில் மகிழ்ச்சிகரமான தருணம் உருவானது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மது கனி அவர்களின் வழிநடத்தலின் கீழ், மாவட்ட மேலதிக பதிவாளர் அஸ்வரின் முன்னெடுப்பில், காலம் கடந்த பிறப்புச் சான்றிதழ்கள் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதுடன், நிர்வாக உத்தியோகத்தர் ,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நிஹாத் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் நீண்டநாளாக எதிர்பார்த்த ஒரு அடையாளத்தை வழங்கிய இந்த முயற்சி, உண்மையான பொதுச் சேவையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button