News

ரயிலின் கேன்டீனில் 100 ரூபா பெறுமதியுடைய போத்தல்களை 160 ரூபாவிற்கு விற்பனை செய்தவர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்கபட்டது – நுகர்வோர் அதிகாரி ஒருவர் பயணி போல் சென்று கொள்வனவு செய்து திருடனை பிடித்த சம்பவம் பதிவு

‘மீனகய’ ரயிலின் சிற்றுண்டிச்சாலையில் குடிநீர் போத்தல்களை அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (28) 100,000 ரூபா அபராதம் விதித்தது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) படி, 1000 மில்லி குடிநீர் போத்தலுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாவாகும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், குறித்த வியாபாரி போத்தல்களை 160 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார், இதன் மூலம் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பயணிகளிடம் மேலதிகமாக 60 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர், சாதாரண வாடிக்கையாளர் போல வேடமிட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட போத்தலை கொள்வனவு செய்ததன் பின்னரே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button