News

பாடசாலை வேன் ஓட்டுநர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் பாடல் அடங்கிய பென்டிரைவ் (Pen drive) வழங்கி வைப்பு !

கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன் ஓட்டுநர்களுக்கு, நற்பண்புகளை வளர்க்கும் பாடல்கள் அடங்கிய பென்டிரைவ் வழங்கும் நிகழ்வு (30ஆம் திகதி) நடைபெற்றது.

இது பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர் லலித் கமகே ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேல் மாகாண கல்வி, கலாசார மற்றும் கலை விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘சத்தர பிரசர கீ ரச விந்தன’ (Sathara Prasara Gee Rasa Vindana) திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றது. அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 160 ஓட்டுநர்களுக்கு இந்த பென்டிரைவ்கள் வழங்கப்பட்டன.

ரசனைக்குரிய சுமார் 450 பாடல்கள் மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் பாடல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் மன ஆரோக்கியம், உணர்திறன் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதற்கும், அவர்களது மனநிலையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர் லலித் கமகே உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 160 ஓட்டுநர்களுக்கு இந்த பென்டிரைவ்கள் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வழங்கப்பட்டன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button