News
மே தின பேராணியில் பிளாஸ்டிக் துப்பாக்கியை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது

மே தினத்தில் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கூட்டத்தின் மத்தியில் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைத்துப்பாக்கி வடிவிலான அந்தப் பொருள் பிளாஸ்டிக் மாதிரியென்றும், அதிலிருந்து சுட முடியாது என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.



