News
ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலில் தனது கட்சியைப் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் ..

ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலில் தனது கட்சியைப் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“பல ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அவை சிறிய மீன்கள் மாத்திரமே, ஆனால் பெரிய சுறாக்கள் தேசிய மக்கள் சக்திக்குள்ளேயே இருக்கின்றனர். அரசாங்கம் அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.”
அக்கட்சியின் வட மாகாண மே தினப் பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.


