News
கொரோனா காலத்தில் பல அர்ப்பணிப்புகளை செய்து தன்னார்வத்துடன் பணியாற்றிய ஒட்டமாவடி இளைஞருக்கு 2026 ஹஜ் கடமையை நிறைவேற்ற இலவசமாக வாய்ப்பளிக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோயின் போது தன்னார்வத்துடன் பணியாற்றிய இளைஞர் ஒருவர், 2026 ஹஜ் யாத்திரையில் இலவசமாக பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் முனீர் முல்லாபர், நேற்று (04) தனது அலுவலகத்தில் விமான டிக்கெட்டுகளையும் ஆவணங்களையும் மௌலவி சமீமிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
இவரது அர்ப்பணிப்புக்காக இவரது சகாக்களால் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களை பெரும் தனிப்பட்ட ஆபத்துக்கு மத்தியில் அடக்கம் செய்ய உதவிய ஓட்டமாவடியைச் சேர்ந்த இளைஞர் குழுவில் சமீம் ஒருவராவார்.
இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில், இந்த யாத்திரையில் கலந்துகொள்ளும் கௌரவத்தைப் பெறுவதற்காக இந்தக் குழு இவரது பெயரைப் பரிந்துரைத்தது.


