தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவம் மற்றும் மன உளைச்சல் என்பதை கருத்தில் கொண்டே கெஹலியவுக்கு பிணை கிடைத்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 3 பேருக்குப் பிணையில் செல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தமது கட்சிக்காரருக்கு தற்கொலை செய்துகொள்ளும் மனோபாவம் மற்றும் மன உளைச்சலுக்குப் பின்னரான மன உளைச்சல் குறைபாடு உள்ளதால், சிறைச்சாலை வைத்தியசாலையில் இவ்வாறான ஒரு நோயாளியைக் கவனிப்பதற்கான வசதிகள் இல்லை என தெரிவித்ததுள்ள நிலையில் அவரது நோய் மற்றும் அவரது வயது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

