News

VIDEO > ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தியதை பார்த்து நாங்கள் அப்படியே ஷாக் ஆனோம் ; டொனால்ட் ட்ரம்ப்


“ஈரான் உண்மையிலேயே ஒரு பெரும் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாடாக இருக்கிறது என டொனால்ட் ட்ரம்ப் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்… 

கடந்த இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்று பாருங்கள், ஈரான் மத்திய கிழக்கிலுள்ள இந்த மற்ற நாடுகளுக்கு அடிக்க போயிருக்கக் கூடாது. அந்த ஏவுகணைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே தயார் செய்யப்பட்டிருந்தன. அதனால் அவர்கள் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளைத் தாக்கினர்.
யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

மேலும் , உங்களுக்குத் தெரியும், அவர்கள் திருப்பித் தாக்கினர். அவர்கள் பணிந்து போயிருக்கலாம். ஆனால் ஒன்று நினைத்துப் பாருங்கள், நாங்கள் அங்கில்லை என்றால், ஈரானுக்கு மிகப்பெரிய சக்தி இருந்திருக்கும். 

அவர்களிடம் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் இருந்தன, அவற்றில் பெரும்பாலானவற்றை நாங்கள் அழித்துவிட்டோம்.


அவர்களிடம் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் (drones) இருந்தன, அவர்கள் எல்லா இடங்களிலும் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரித்துக் கொண்டிருந்தனர். அந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் தகர்த்துவிட்டோம். 

இப்போது அவர்கள் இரண்டு அல்லது மூன்று ஏவுகணைகளை மட்டுமே அனுப்புகிறார்கள். இப்போது உங்களுக்குத் தெரியும், அவர்களிடம் இன்னும் சில இருக்கலாம், ஒருவேளை எட்டு சதவீதம் மிஞ்சியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒழிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் செய்தவற்றால் அவை அழிக்கப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்

Video > https://www.instagram.com/reel/DV9TxKZkVBw/?igsh=YjJ4ZGgzZXFrbTJl

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button