News
தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் ஆராய்வது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பொறுப்பாகும்

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் ஆராய்வது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“தயவுசெய்து, இறையாண்மையையும், மக்களின் வாக்குகளையும் பண்டமாக மாற்றாமல் எதிர்கால சந்ததிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுக்கு உள்ளது. அதேபோல, இவற்றைப் பார்க்கும் வாக்காளர்களும் தங்கள் வாக்கை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலையிட்டு அவர்களைப் பார்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இது தேர்தல் ஆணையத்தால் நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றல்ல.



