News

காரில் வந்த மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு #காலி

காலி, தங்கேதர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காவல்துறையினரின் தகவல்படி, படுகாயமடைந்த நிலையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தங்கேதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button