News

தமிழக புதிய முதலமைச்சரின் பார்வை இலங்கை மீது..

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர வழிகள் ஊடாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக முதல்வர் தளபதி விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றின் ஊடாகவே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் தொடர்பாக, அண்மையில் தமிழக முதல்வராகப் பதவியேற்ற தளபதி விஜய், இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் படகுடன் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விசேட கவனத்திற்கு அவர் அதில் கொண்டு வந்துள்ளார்.

தவிர, தமிழகத்தின் புதிய முதலமைச்சர் தளபதி விஜய் அந்தக் கடிதத்தில், ஏற்கனவே 54 இந்திய மீனவர்கள் இலங்கையின் சிறைகளில் இருப்பதை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், 264 இந்திய மீனவப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விரைவாக விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர வழிகள் ஊடாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக முதல்வர் தளபதி விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button