News

அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்புவர்கள் அனைவரும் முட்டாள்கள் – தேசத்துரோகிகள் ; ட்ரம்ப்

தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



ஈரான் எதிரி நம்மை எதிர்த்து இராணுவ ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் போலிச் செய்திகள் கூறப்படுகின்றது. அது முற்றிலும் பொய்யானது. இது போன்ற அபத்தமான செய்திகளை பரப்புவதே தேசத்துரோகச் செயல் ஆகும். அவர்கள் எதிரிக்குத் துணை போகிறார்கள். ஈரானுக்கு உதவி செய்கிறார்கள்.



இது ஈரானுக்கு ஒரு வீண் நம்பிக்கையை அளிப்பதைத் தவிர, வேறு எதுவும் கிடையாது. இவர்கள் நம் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் கோழைத்தனமான அமெரிக்கர்களே ஆவர். ஈரான் கடற்படையில் 159 கப்பல்கள் இருந்தன. அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் இப்போது கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. அவர்களிடம் இப்போது கடற்படையே இல்லை.



ஈரானின் விமானப்படை அழிந்துவிட்டது. அனைத்துத் தொழில்நுட்பங்களும் கைவிட்டுப் போய்விட்டன அவர்களின் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை, மேலும் அந்நாடு ஒரு பெரும் பொருளாதாரப் பேரழிவைச் சந்தித்து வருகின்றது. தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும். என ஜனாதிபதி ட்ரம்ப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button