Newsஇலங்கைஉலகம்தொழில்நுட்பம்மடவளைவிளையாட்டுஜனாசா
பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயம்.

கொழும்பு- பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி பேருந்தை நோக்கி வந்த போது, பஸ் சாரதி முச்சக்கரவண்டி பஸ்ஸில் மோதாமல் இருக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சாலையில் இருந்த மண் திட்டுடன் மோதி, பஸ் சில அடிகள் கீழே சாலையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பஸ் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த நால்வர் அடங்குகின்றனர்.
காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

