ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை
எந்தவொரு நாட்டிலும் பத்து வருடங்கள் வாழ தான் விசா வைத்திருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (11) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்த அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வீசா பெற்றுக் கொண்டமை தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் யாரும் தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 80 அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற விசா பெற்றுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஒவ்வொருவரும் கூறுவது போல் இதுவும் ஒரு அடிப்படையற்ற அறிக்கையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.