News
சமூக வலைகளில் வைரலாகிய வீடியோ – மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்று (16) யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் உரையாற்றிக்கொண்டு இருந்தார். இதன்போது ரிஷாத்திற்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால் வைக்கப்பட்டது.
அதனை படித்துப் பார்த்த ரிஷாத் பதியுதீன், அந்த கடதாசியை எடுத்து ஆவேசத்துடன் கீழே வீசிவிட்டு தனது உரையை முடித்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார். அவரின் இந்த செயற்பாடானது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. VIDEO > https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/2430448320658346/

