News
சம்பிக ரனவக மாறிவிட்டார்.
சம்பிக்க ரனவக அவரின் மதவாத அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மாறி தேசிய அரசியலில் கலந்து விட்டதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் , சன்ன ஜயசுமன எம்மோடு இணைந்துள்ளதாகவும் சம்பிக ரனவகவுக்கு நாம் பிரதமர் பதவி வழங்கவுள்ளதாகவும் சிலர் போலி பிரசாரம் செய்கின்றனர்.
சன்ன ஜயசுமன எம்மோடு இல்லை நாம் அவரை நிராகரித்து விட்டோம். சம்பிக்க ரனவக அவரின் மதவாத அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மாறி தேசிய அரசியலில் கலந்து விட்டார்.அவர் 2015 இலே எம்மோடு இணைந்துவிட்டார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.