அனுர குமார,விமல் வீரவன்ச அனைவரும் ஒரே பாசரையில் வளர்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் ; ஹிதாயத் சத்தார்

அனுர குமார விமல் வீரவன்ச அனைவரும் ஒரே பாசரையில் வளர்ந்தவர்கள் என்பதை முஸ்லிம்களுக்கு நினைவூட்டுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.
உடுனுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
அனுர விமல் அனைவரும் ஒரே பாசரையில் வளர்ந்தவர்கள் என்பதை முஸ்லிம்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அனுர குமார தனது குஞ்சி தாடியை முழு தாடியாக்கி வேஷத்தை மாற்றினாலும் அவர்களது உள்ளாத்தில் மறைத்து வைத்துள்ள குரோதத்தை இல்லாமல் செய்ய முடியாது.
குரோதத்தின் வெளிப்பாடாகவே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் முஸ்லிம் பெண்களின் கருவரையில் முஸ்லிம் தீவிரவாதம் உருவாவதாகவும் ஜனாஸா எரிப்பின் போது மருத்துவத்துறை வழங்கும் பரிந்துரைக்கு அமையவே எதையும் செய்யவேண்டும் என பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய அவர் அவரது கட்சியில் தேசிய பட்டியல் வேட்பாளராக இருந்த இப்ராஹிம் ஹாஜியாரின் மகன்கள் தற்கொலை குண்டுதாரிகள் என்பதை அறிந்துகொண்ட பின்னரே ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கோணத்தில் விமர்சிக்க தொடங்கினார் என அவர் குறிப்பிட்டார்.

