நாளை ஏதும் பிரச்சினை ஏற்படுமா ? அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமா ?
கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தேர்தலுக்கு முன்னரான பிரசாரம் இடம்பெற்ற காலம் மிகவும் அமைதியாக இருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
இதுவரை 450 தேர்தல் தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் கிடைத்த போதும் அதில் 10 சம்பவங்கள் மட்டுமே சற்று கவணிக்கத்தக்க சம்பவம் என கூறியுள்ளார்.
நாளை ஏதும் பிரச்சினை ஏற்படுமா ? அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமா ? என அவரிடம் வினவியமைக்கு பதில் அளித்த அவர் ,
மக்கள் கடந்த தேர்தல் பிரசார காலத்தை போல் நாட்டு சட்டத்தை மதித்து நடந்தால் பிரச்சினை ஏதும் நடக்காது என கூறிய அவர்,பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
மேலும் 63000 பொலிஸார் தேர்தல் தொடர்பான நேரடி கடமைகளில் உள்ளதாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் உள்ளதாகவும் அவர் கூறினார்.