அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றிமுகம்… போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு அப்பால் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஆச்சரியமும் அதிர்ச்சியும்
ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெறவுள்ளதாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க , ஜனாதிபதியாக பதவியேற்க பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன.
தேர்தல் முடிவுகள் இன்றைய தினத்திற்குள் அறிவிக்கப்பட்டால் இன்று இரவே ஜனாதிபதியாக அனுரகுமார பதவியேற்பாரென தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் இந்த தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு அப்பால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அதன்போது சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அரச தரப்பு தகவல்கள் சொல்கின்றன.
நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லையெனில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றியும் அரச மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது .