Eng. Abdur Rahman மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை.
தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான NPP அலையில், சிறுபாண்மைத்தளத்தில் தவிர்க்க முடியாத முற்போக்கானவர்களை புறந்தள்ள முடியாது என்பதிலும் எமது கவனம் தேவை.”
தேர்தல் காலங்களில் கடந்த கால வரலாறுகளை உண்மைகளை நியாயங்களை மறந்து விடாமல், அவரது கடந்த காலம் என்ன? ஒரு கொள்கைக்காக அவர் செய்த பங்களிப்புக்கள் என்ன? அதில் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகள் என்ன? என்பது பற்றியும் நாம் பார்க்கவேண்டும்.
நீண்ட நாள் உழைப்புகளுக்கு பின்னர், தியாகங்களுக்கு பின்னர் Jvp இந்த இடத்துக்கு வந்திருக்கிறது என்றால் அவர்களின் தொடர்முயற்சியின் பலனாகும். அது போன்ற தொடர்ச்சியான உழைப்பையும் ,திட்டமிடலையும் NFGG கட்சியால் செய்ய முடியவில்லை என்பது எமக்கும் வருத்தமளிக்கின்றது.
மற்றபடி கொள்கையிலும், நேர்மையிலும் எந்தவிதத்திலும் அப்துர் ரஹ்மான் போன்றவர்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதனை கடந்த கால பல விடயங்களுக்கூடாக நாம் நினைவுபடுத்தலாம்.
NPP யை பொறுத்தமட்டில் வடகிழக்குக்கு வெளியில் குறிப்பாக சிங்களப் பகுதிகளில் போதியளவு திடமிடப்பட்ட பல மாற்றங்களை அவதானிக்கின்றோம் ஆனால் வடகிழக்கில் இன்னும் NPP யின் முயற்சிகளானது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை மையப்படுத்தியதாக அமைந்திருக்கவில்லை என்பது எமது அவதானிப்பு.
அதேநேரம் NPP க்கான ஆதரவு தளம் என்பது வடகிழக்கில் அடித்தளமிடப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் பொருத்தமானவர்களைக் கொண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான ஆட்கள் இனங்கானப்படாமலே இருக்கின்றது இது எவ்வளவு தூரம் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்தப்போகிறது என்பது கேள்விக்குறியாகும்.
அதேபோன்று NPP யானது ஏற்கனவே உள்ள UNP, SLFP,SLPP, SJPபோன்ற தேசிய கட்சிகளின் வரிசையில் தற்போது வளர்ச்சி பெற்றுள்ள இன்னும் வளரவேண்டிய அல்லது நாமும் அவர்களுமாக வளர்க்க வேண்டியதுமான கட்சியாகும். என்றாலும் சிறுபாண்மைத் தளத்தில் NPP சார் கொள்கைகளுடன் அல்லது முற்போக்கான கொள்கைகளுடன் பலவருடங்களாக வளர்ந்து வருகின்ற கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் போன்றவர்களை நாம் சமூகத்திற்கான அரசியலிலுருந்து மலுங்கடிக்கவும் புறந்தள்ளவும் முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் போன்றவர்களை இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பதானது எவ்விதத்திலும் NPP யின் அரசாங்கத்தை பாதிக்காது என்பது எனது அபிப்பிராயமாகும்.
[MLM.சுஹைல்]