ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம் ; சட்டத்தரணி திரந்த வளலியஎத்த….
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என சட்டத்தரணி திரந்த வளலியெத்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவினால் அந்த பதவிக்கு ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது ஈஸ்டர் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கீழ் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்கப்படுமென ஜனாதிபதி தொடர்ச்சியாக உறுதியளித்த போதிலும், தற்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவி செனவிரத்னவின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கோர்ட் தன்னை கைது செய்வதை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் சட்டத்தரணி வலலியத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,2023 ஆம் ஆண்டு ரவி செனவிரத்ன குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக திரத்ன வளலியத்த மேலும் தெரிவிக்கின்றார்.