News
ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் ‘தானா சேர்ந்த கூட்டம் ‘ – பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து கலந்துரையாடல்

எதிர் வரப்போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து ஆதரவாளர்கள் சிலருடன் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அரசியல் பிரமுகர்களும் இளைஞர் அணியினரும் பங்குபற்றியிருந்தனர். எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்குத் தயாராவதற்கான யுக்தித் திட்டமிடல்கள் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்
நாளை, நாளைமறுதினமும் பிரதேசவாரியாக நடைபெறும்.




