கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது கால்களை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட இரு இளைஞர்களை ஹலவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹலவத்த, பங்கதெனிய மற்றும் குமாரகட்டு பிரதேசங்களை சேர்ந்த இருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரண்டு இளைஞர்கள் கடந்த 27ஆம் திகதி முறைப்பாடு ஒன்றினை விசாரிப்பதற்காக ஹலவத்த பொலிஸ் சிறு முறைப்பாடு பிரிவுக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த சிறு புகார்கள் திணைக்கள பெண் அதிகாரி ஒருவரது கால்களை அந்த இளைஞர்கள் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்துள்ளது.
சம்பவத்தை எதிர்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (28) மேலதிகாரிகளிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஹலவத்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



