எமது அரசியல் பயணத்தை ரணில் விக்ரமசிங்கவுடனே தொடர்வோம் – அனைவரையும் ஒன்று திரட்டி பரந்த கூட்டணியை உருவாக்கி தேர்தலின் பின் பலமான எதிர்க்கட்சி ஆவோம் ; மகிந்தானந்த
ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான அனைவரையும் ஒன்று திரட்டி கூட்டு பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அல்லது தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் அளுத்கமகே தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய செய்ததை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தற்போது செய்து வருவதாகவும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தார், ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை குறைத்துள்ளார், பால் தேநீருக்கு பதிலாக வெறும் தேநீர் வழங்குகிறார், மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் வாழ்கிறார் என
மகிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கத்தை அமைத்துள்ள போதும் , அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்த அளுத்கமகே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதே நிலையே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.