Video இணைப்பு > பஸ்ஸில் பயணித்த இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய குற்றத்தில் நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது
பஸ்ஸில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச நபர் ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.. ஆனால் அது தொடர்பில் உறுதி செய்யப்பட முடியவில்லை ( Madawala News )
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
https://www.facebook.com/ginideiya.lk/videos/1510132532927119/?mibextid=rS40aB7S9Ucbxw6v
அதேநேரம் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.
கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார், அவர் அறிவித்ததன் பிரகாரம் பஸ் பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் சமூக வலைகளில் பரவும் வீடியோ 👇