சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைக்க கடின உழைப்புடன் செயற்பட்ட மருதமுனை தேர்தல் குழுவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவிப்பு
இளைய தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் மு.கா மருதமுனை தேர்தல் குழுவுடன் விசேட சந்திப்பு !!
நூருல் ஹுதா உமர்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த மருதமுனை தேர்தல் குழுவுடனான விசேட சந்திப்பு மருதமுனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் அபுல் ஆசிரியர் தலைமையில் (29) நடைபெற்றது.
கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றிபெற கடின உழைப்புடன் செயற்பட்ட தேர்தல் குழுவுக்கும், மருதமுனை பிரதேசத்தில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சியின் தலைவர் சார்பிலும், கட்சி சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்வதற்கான திராணியை வளர்த்துக்கொள்வது டன் எமது கட்சி செயற்பாடுகளில் புதிய இளைய தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்தீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். உமர் அலி, எம்.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். நவாஸ், மருதமுனை மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.