News
இஸ்ரேலின் கோரத்தாக்குதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்வு
இஸ்ரேல் நடத்தி வரும தொடர் தாக்குதல்கள் காரணமாக பெலனானில் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என அந்நாட்டு பிரதமர் நஜீப் மிகாதி தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களினால் மாத்திரம் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்துள்ளதாக பெலனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் தமது பாதுகாப்பு கருதி அகதிகளாக இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு மில்லியன் கணக்கான மக்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஷ்ரல்லாஹ், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, குறித்த அமைப்பு, இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்களை நடத்தியுள்ளது.