News

எரிபொருளின் விலையை ஒரேயடியாக நூறு அல்லது இருநூறு ரூபாவால் குறைக்க முடியாது

எரிபொருளின் விலையை ஒரேயடியாக நூறு அல்லது இருநூறு ரூபாவால் குறைக்க முடியாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், எரிபொருள் மீது அதிக வரி விதிக்கப்பட்டதால்,அந்த உயர் வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அவர் கூறியது போல், எரிபொருள் விலை திருத்தத்தின் போது இந்த வரிகளை நீக்குவது குறித்து பரிசீலித்தீர்களா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர்,

எரிபொருள் விலையை பெருமளவு குறைக்க விரும்பினாலும், இலாப நட்ட நிலைமைகளை கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒரேயடியாக நூற்றுக்கு இருநூறு வரை எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், நிதி நிலைமையை பாதிக்கும்.

மேலும்,பொருளாதாரத்தை படிப்படியாக வலுப்படுத்துவதுடன்,எரிபொருள் விலையில் அதிக சலுகைகள் வழங்கப்படும் என்றும்,இந்த விலைக் குறைப்புடன் பஸ் கட்டணங்கள்,உற்பத்தி கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் ஆகியவற்றைக் குறைக்கவும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பரிசீலனையின் பின்னரே இம்முறை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button