News
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்கம் உள்ளிட்ட புதிய கட்டுப்படுகள் விதிப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு சில புதிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த Sri Lanka Cricket Institute முடிவு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கட் மற்றும் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நிபுணத்துவத்தை பாதுகாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், வீரர்களின் ஆடை, பயணம் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனை ஆகிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கட்டை காற்சட்டை மற்றும் செருப்பு அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போட்டிகளின் போது சமூக ஊடகங்கள், வீடியோ கேம்கள், இரவு நேரத் திரைப்படங்கள் மற்றும் அதுபோன்ற செயல்பாடுகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.