News

ஆணுறு…பை வெட்டி மேசையில் வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்… #இலங்கை

ஆண்குறியை அறுத்து மேசையில் வைத்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹபரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் திருகோணமலை வீதியை சேர்ந்த 27 வயதான வெல்கம டொன் தினேஷ் மதுஷங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த தற்கொலை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் சுகயீனம் காரணமாக கிளினிக்கிற்குச் சென்றவர் சில சமயங்களில் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான உடல் நிலை காரணமாகவே குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்ததாக உயிரிழந்தவரின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞன் தனது பெற்றோருடன் வசிக்கும் வீட்டை அண்டியுள்ள தனது சொந்த கடை அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Back to top button