77 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொன்று கைதான 17 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு


பலாங்கொடை – தொரவல்ஓயா பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான 17 வயதுடைய பாடசாலை மாணவர் பலாங்கொடை பதில் நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பலாங்கொடை – முகுனமலை பகுதியில் வசித்துவந்த 77 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜூன் 27 ஆம் திகதி நீராடுவதற்கு தொரவெல ஓயாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த வயோதிபப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாகப் பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளார்.

