News
வரி நிலுவைகளை சேகரிக்க திணைக்கள அதிகாரிகள் வீடுகளுக்கு செல்ல தீர்மானம் !
2023 /2024 வருமான வரி நிலு வைகளை கடந்த செப்டெம்பர் 30 க்கு முன்னர் செலுத்துமாறு இறைவரித் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில்,
குறிப்பிட்ட திகதிக்குள் நிலுவைத் தொகை செலுத்தாத நபர்களின் வீடுகளுக்குச் சென்று நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு இறை வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரி செலுத்துவோர்,நிலுவையில் உள்ளஅனைத்து வரிகளையும் செப்டம்பர் 30 க்கு முன்னர், செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுயமதிப்பீட்டுக் கட்டண முறையின் கீழ் இதுவரை நிலுவைத் தொகையை செலுத்தாத மக்களிடம் சென்று வரிநிலுவைகளை வசூலிக்கும் வேலைத் திட்டத்தை தமது திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை (04) முதல் ஆரம்பித்துள்ளதாக உள்ளதாக இறைவரி திணைக்கள ஆணையாளர் கூறியுள்ளார்.