News
கண்டியில் ஹிதாயத் சத்தாருக்கு SJB யில் வேட்புமனு இல்லை

கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஹிதாயத் சத்தாருக்கு கட்சி வேட்பு மனு வழங்காது என கூறப்படுகிறது.
முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் கண்டி மாவட்ட மக்களின் ஆதரவை பெற்ற ஒருவராவார்.
இம்முறை அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கட்ட நிலையில் அவருக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை.
இளைஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்கபடும் என கூறப்பட்ட நிலையில் ஹக்கீமும் ஹலீமும் போட்டியிடுவதாக கூறப்பட்டது.

