News
ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் திலக்ரத்ன டில்ஷான்
நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய அரசியல் கட்சியில் இணைந்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளராக தில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்குரார்ப்பண நிகழ்வில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்
எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.
ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என தெரிவித்துள்ளார்