கல்ஹின்னையில் உயிரிழிந்த வர்த்தகர் மர்ஹூம் ரூமி NPP ஆதரவாளர் ; குடும்பத்தினர் விளக்கம்
கடந்த மாதம் அங்கும்புற கல்ஹின்ன பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவதாத்தில் தள்ளிவிடப்பட்ட மொஹமட் ரூமி என்பவர் NPP ஆதரவாளர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 19 திகதி NPP காரியாளயத்தில் மர்ஹூம் ரூமி இருந்த போது அவரை புகைப்படம் எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்பிடைய பாருக் என்ற நபர் சமூகவலைகளில் பதுவிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவியுள்ள போது அவரின் முகத்தில் பிளேன் டீயை வீசி அவரை தள்ளிவிட்டதாகவும் அவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் அவர் சிகிழ்ச்சை பலனின்றி உயிரிழந்தாக இந்த விடயம் தற்போது நீதிமன்றில் விசாரணையில் இருப்பதாக தெரிவித்தனர்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கட்டு சிகிற்சை பலனின்றி உயிரிழந்தாக வெளியான செய்தி தொடர்பில் உண்மைத்தன்மையை உயிரிழந்த மர்ஹூம் ரூமியின் மகன் மடவளை நியுசுக்கு தெளிவுபடுத்தி அதேவேளை குறித்த சந்தேக நபர் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் என கூறினார்.
ஏற்கனவே மடவளை நியூசில் வெளியான செய்தி லங்கா சி நியுசின் மொழிபெயர்பு என்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் அந்த செய்தியால் மர்ஹூம் ரூமி அவர்களின் குடும்ப்பத்தாருக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொள்வதோடு அதில் செய்தியை தவறாக புரிந்துகொண்டு வெளியிட்ட் பின்னூட்டங்களுக்கு நாம் பொறுப்பில்லை என்பதை தெரிவிக்கின்றொம்.