News
வௌ்ளம் காரணமாக களனி மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயங்களில் 04 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை.
வௌ்ளம் காரணமாக களனி மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயங்களில் 04 பாடசாலைகளுக்கு நாளை(14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை, யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் என்பனவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் ஏனைய பாடசாலைகள் வழமை போல் இயங்குமென மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது.