News
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 33,379 குடும்பங்களைச் சேர்ந்த 129,989 பேர் பாதிக்கப்பட்டனர்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் 33,379 குடும்பங்களைச் சேர்ந்த 129,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 200,67 குடும்பங்களைச் சேர்ந்த 80,529 பேர், திடீர் வெள்ளம், அதிக காற்று, மின்னல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 10,904 குடும்பங்களைச் சேர்ந்த 40,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

