News
அர்ஜுன் அலோசியஸ் இன் பிணை கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
VAT வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெண்டிஸ் கம்பனி பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் இன் பிணை கோரிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
3.5 பில்லியன் VAT வரி ஏய்ப்பு குற்றத்தில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 14) அலோசியஸை சிறையில் அடைத்துள்ளது.