கடந்த 13 நாட்களில் மட்டும் புதிய அரசாங்கம் 419 பில்லியன் ரூபா கடனை பெற்றுக்கொண்டுள்ளது ; SJB உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவிப்பு
2024 ஒக்டோபர் 02 முதல் 15 வரையான 13 நாட்களில் அரசாங்கம், 419 பில்லியன் ரூபா கடனை திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரக் கடன்கள் மூலம் பெற்றுள்ளது என சமகி ஜன பலவேகய (SJB) மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்தின,
அரசாங்கம் வரம்பற்ற கடன்களை பெற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், நாட்டிற்கு உறுதியான நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.
அக்டோபர் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடையில் புதிய அரசாங்கத்தின் கடன்களின் பின்வரும் விவரத்தை அளித்தார்;
*அக். 2 ரூபா 142.2 பில்லியன்
*அக்டோபர் 09 – ரூ. 85 பில்லியன்
*அக்டோபர் 11 – ரூ. 95 பில்லியன்
*அக்டோபர் 15 – ரூ. 97 பில்லியன்
மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக அரசாங்கம் 32.23 ரூபாவை பில்லியன் தினமும் செலவழிக்கிறது அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1.34 பில்லியன் ரூபாவை செலவழிக்கிறது.
இந்த நிதியைப் பயன்படுத்தி எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் எம்.பி மேலும் கேட்டுக் கொண்டார்.