மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு வந்த பின்னர் வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தொடர்பான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நாம் வினவியபோது, பயன்படுத்திய சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கடிதம் வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள எல்லையை குறிக்க முடியாது எனவும், தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை மதிப்பிடாமல் இவ்வாறு செயற்படுவது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

