விலை போகாதே ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே ; இம்ரான் மஹ்ரூப்
நான் அன்று மக்களுடன் இருந்ததால் இன்று மக்கள் என்னுடன் உள்ளனர்-இம்ரான்
நான் அன்று மக்களுடன் இருந்ததால் இன்று மக்கள் என்னுடன் உள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
நேற்று (20) மாலை திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த ஆட்சி காலத்தில் அரசின் சலுகைகளுக்கு அடிபணியாமல் நான் எடுத்த முடிவுகளாலேயே இன்று என்னால் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு தைரியமாக செல்ல முடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் விலை போகாதே ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமனற உறுப்பினராக நான் இருப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.அதனால்தான் கோல்பேசில் இடம்பெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் காலில் போட்டு மித்தித்த அரசியல்வாதிகளில் எனது புகைப்படம் இருக்கவில்லை.
நான் அன்று மக்களுடன் இருந்ததால் இன்று மக்கள் என்னுடன் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் நாம் பெரும்பான்மை பெற்றால் ஜனாதிபதியுடன் இணைந்து செல்வோம்.தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெற்றால் அவர்களுக்கு ஆட்சியை கொண்டு செல்ல கால அவகாசம் வழங்க வேண்டும் .
ஏன் எனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விமர்சனம் ஊடாக மட்டுமே ஆட்சிக்கு வந்தார்கள்.கடந்த ஆட்சியாளர்களின் மேல் குரோதத்தை வளர்த்தே அவர்கள் ஆட்சியை பிடித்தார்கள்.
கால அவகாசம் வழங்கினால் எல்லாரும் ஒருவர்களா இல்லை இவர்கள் வேறுபடடவர்களா என மக்கள் இனம்கண்டு கொள்வார்கள்.
அதேபோல் இவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்ட நான் என்றும் தயங்கமாட்டேன்.
ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியை விமர்சனம் செய்வதை அந்த கட்சி ஆதரவாளர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை.
இதே நிலையே கோட்டபாய ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் காணப்பட்டது.இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும்.
முட்டை விலை குறைவடைந்ததும் அமைச்சருக்கு சென்ற கொமிஸ் பணம் தற்போது இல்லாததால் முட்டை விலை குறைந்தது என்கிறார்கள்.
தற்போது முட்டை விலை அதிகரித்துள்ளது.இப்போது அந்த கொமிஸ் பணம் யாருடைய பக்கட்டுக்குள் செல்கிறது என அவர்கள்தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.