News

கிளப் வசந்தவின் மனைவிக்கு மலர் வலையம் அனுப்பப்பட்டதை அடுத்து அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அத்துருகிரியவில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரபல வர்த்தகர் கிளப் வசந்தவின் மனைவி மாணிக் விஜேவர்தனவுக்கு இனந்தெரியாத நபரொருவர் மலர் வளையம் ஒன்றை கொடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கிளப் வசந்தவின் மனைவிக்கு குறித்த மலர் வளையம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



அவருக்கு மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை மூலம் தோட்டாக்களை அகற்றியுள்ள நிலையில், அவர் களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், 03 சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



இதேவேளை, அண்மையில் இனந்தெரியாத நபரோ அல்லது குழுவினரோ அவருக்கு மலர் வளையமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அதன்படி, சம்பவத்தையடுத்து, மருத்துவமனையைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கிளப் வசந்தவின் இறுதிக்கிரியைகள் அன்று வசந்தவின் பிள்ளைகள் அதில் பங்கேற்க வேண்டுமென எதிர்பார்த்திருந்ததாகவும் இருப்பினும் பாதுகாப்பு நிமித்தம் பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button